விண்வெளியில் செடி வளர்க்க நாசாவுக்கு உதவும் உங்கள் லன்ச் துணைவன்!

பூமியில் மட்டுமன்றி விண்வெளியிலும் சென்று ஆட்சி செய்கிறான் மனிதன். மூளையைக் கசக்கி, இந்தப் பூவுலகில் வாழ்வை
எளிதாக்கும் அத்தனை முயற்சிகளையும் செய்து வெற்றி காண்கிறான். இப்படி பூமியில் உள்ள வாழ்க்கையைத் தொழில்நுட்பத்தின் மூலம் ஆண்ட மனிதன், விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து பூமியையே தொழில்நுட்பத்தால் ஆளுகின்றான்.
2015 ம் ஆண்டிலிருந்து, ISS எனப்படும்  International Space Stationல் வாழும் மனிதனுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய Plant Pillow எனப்படும் மெல்லிய பைகளில், சில வகையான செடியின் விதைகளைச் செயற்கையாக ஊசிகளின் வழியாகத் தண்ணீர் மற்றும் காற்று செலுத்தி வளர்த்துவந்தனர். அங்கு வாழும் விஞ்ஞானிகள் Vegetable Producing System என்னும் முறையின் மூலமாகக் கீரை, தக்காளி போன்ற காய் கனிகளை வளர்த்து வந்தனர். இதன் மூலம் சத்தான உணவைப் பெறுவது மட்டுமன்றி விண்வெளியில் செடிகளின் செயலாற்றலால், புவியீர்ப்பிற்கு அவை பழகுதல் போன்ற விவரங்களை அறிந்து கொள்கின்றனர். மேலும் இதன் அடிப்படையில் பூமியில் உள்ளதைப் போலவே செடிகளை விண்வெளியிலும் வளர்ப்பதற்கான வழிகளையும் அறிந்து கொள்கின்றனர்.
 
தற்போது இந்த ஆய்வில் நாசாவின் விஞ்ஞானிகள் கையாளும் புதிய முயற்சிக்காக டப்பர்வேர் (Tupperware)  நிறுவனத்துடன் கைகோத்துள்ளனர்.  2017 ம் ஆண்டு,  PONDS என்று சுருக்கமாகக் கூறப்படும் Passive Orbital Nutrient Delivery Systemமின் முந்தைய வடிவத்தை வரைந்த நாசாவின் ஆராய்ச்சி விஞ்ஞானி  Howard Levine, Techshot என்னும் நிறுவனத்திடம் தன் வடிவத்தை மேலும் மெருகேற்ற அனுப்பினார்.  அந்த  நிறுவனமும்  ஹோவர்டின் திட்டத்தைச் செயல்படுத்த அதை டப்பர்வேர் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இரு நிறுவனங்களும் சேர்ந்து ISS விஞ்ஞானிகளின் வேலையைக் குறைக்க, Semi- Hydroponic System என்னும் மண்ணிலா வேளாண்மை முறையைப் பின்பற்றி PONDSல், அவ்வப்போது தண்ணீர் நிரப்பப்படும் மெல்லிய பைகளுக்கு பதிலாக செடிகளின் விதைகளுக்கும் வேர்களுக்கும் தேவையான தண்ணீரை நிரந்தரமாக வழங்கும் நீர்த்தேக்க முறையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நீர்த்தேக்க முறையில் ஒவ்வொரு தண்ணீர் உருளைக்கும் தனித்தனியாக தண்ணீர் பங்கிடப்படுகிறது. இதனால் வேறொருவரின் துணையின்றி விதைகளும் வேர்களும் தண்ணீரை உறிஞ்சி, செடிகளாக வளர்கின்றன.

PC: NASA

இவற்றுள் நான்கு மாட்யூல் கருவிகள் இருக்கும். Open Source Seed Initiative நெறியின் மூலம் Romaine lettuce என்னும் கீரைகளை வளர்க்கும்  Black Opaque Moduலெ, உள்ளே நடப்பதை வெளிக்காட்டும் கதவுகள் உடைய இரண்டு  மாட்யூல், மற்றும் நீர் வேளாண்மையின் மூலமாக  கீரையின் வேர்களில் தண்ணீரின் செயலையும் புவியீர்ப்பின் செயலையும் தெளிவாகக் கண்காணித்து வீடியோ பதிவு செய்ய ஏதுவான கண்ணாடி உரையுடைய ஒரு மாட்யூல் போன்றவை இருக்கும். 
இதனை வெளியிட்ட நாசாவின் ப்ளோரிடாவில் உள்ள  Kennedy Space centreன்  Veggie Project தலைவர் நிக்கோல் ( Nicole Deto)  கூறுகையில் ”  PONDS திட்டத்தின் மூலமாகக் தண்ணீரின் பங்கீடு, ஆக்சிஜன் இருப்புத்தன்மை, வேர்களின் வளர்ச்சிக்கான வழி போன்றவற்றில் புவியீர்ப்பின் சிறு சிறு விளைவுகளைக் குறைக்கிறது” என்றார்.
மனிதனின் விஞ்ஞானம் கோள் வீதி வரை பாய்ந்தாலும், மனிதனால் உருவான தொழில்நுட்பத்தின் விளைவுகளும் கோள் வீதி வரை எழுதலாம். இதன் காரணமாகத்தான் பிற்காலத்தில் நம் மண்ணில் விவசாயம் அழிந்து போகும் நிலையில், விண்வெளியில் அதை மண்ணிலா விவசாயமாக விதைக்கும் முறையைத் தொடங்கியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று உணவுப் பொருள்களை வாங்க சீக்கிரமாக அனைவரும் ராக்கெட் வாங்க வேண்டும். அதற்கும் டெஸ்லா தயாராகிக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.