சம்பந்தன் ஜயா என்னை நம்புங்கள்?

சதியைப் பற்றிப் பேசுவதற்கு; சுமந்திரனுக்கு எந்தவித யோக்கியமும் கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


சதிவேலை செய்யும் சுமந்திரன் எம்.பியே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

உளுளுராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்து மிக நீண்ட நாட்களின் பின்னர் தான் சபைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சபைகள் அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு கட்சிகளோ எவையும் எங்களுடன் பேச்சுவார்த்தை எதனையும் நடத்தவில்லை. வடக்கு கிழக்கு முழுவதும் எங்களுக்கு ஆசனங்கள் இருக்கின்றன.

அவ்வாறிருக்கையில் சபைகளை அமைப்பதற்கு பல பேருக்கு எங்களது ஆதரவுகள் தேவையாகவும் இருந்தன.

ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் பேசி சபைகளை அமைப்பது தொடர்பாக எங்களுடன் பேசியிருக்கவும் இல்லை. அவ்வாறு பேசுவதற்கு தயாராகவும் அவர்கள் இல்லை.

நாங்கள் ஏறத்தாழ ஒன்றரை மாதத்திற்கு முன்னர் இது குறித்த கட்சியின் செயலாளர் கூட்டமைப்பு உட்பட எவரும் எங்களுடன் பேச வேண்டுமானால் அவ்வாறு பெசுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைகக்கு யாரும் மன்வரவில்லை.

அவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் ஒரு பொதுவானதொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். அதன் பிரகாரமே யாழ் மாவட்டத்திலும் கிளிநொச்சியிலும் யாருக்கும் ஆதரவு இல்லாத நடுநிலையை வகித்திருந்தோம்.

இறுதியாக நடைபெற்ற வவுனியா நகர சபையில் நடந்த தேர்தலில் முக்கியமாக முஸ்லிம் தரப்பினர்கள் அல்லது ஆளுந்தரப்பினர்கள் வந்துவிடுவார்கள் என்ற காரணத்தினால் சிவில் சமூகத்தினால் எங்களுக்கு பல வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வளவு நடந்தும் கூட கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சியினர் அல்லது கூட்டமைப்பு என்ற பெயரில் இருக்கக் கூடியவர்கள் எம்முடன் ,துபற்றி கலந்தாலோசிக்கவில்லை.

ஆனால் என்னுடன் சிவாயிலிங்கம் பேசியிருந்தார். ஆனால் கூட்டமைப்பு சார்பாக அவரது பேச்சுக்கள் , நான் நம்பவில்லை. ஏனெனில் அவருடைய கருத்து ரெலோவின் கருத்து என்று மாவை சேனாதிராசாவும் ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த வகையில் வவுனியா கூட்டத்திலும் கூட நாங்கள் நடுநிலை வகிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் அங்கு நிலைமைகளைப் பார்க்கின்ற போது தமிழரசுக் கட்சியினர் தோல்வியடைந்து அரச ஆளும்கட்சியினரே வெல்லக் கூடிய சூழலும் அங்கிரந்ததை நாங்கள் பார்கக் கூடியதாக இருந்தது.

அவ்வாறான சூழலில் நாங்கள் 3 பேர் தான் இருந்தாலும் கூட போட்டியிட வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நிர்ப்பந்தம் எமக்கு சிவில் சமூகத்தாலும் பொது மக்களாலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாங்கள் போட்டி போட்டோம். எமது கொள்கையின் பிரகாரம் நாங்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடியாது.

அதே போன்று வேறு எவருக்கும் வாக்களிக்க முடியாது. அந்த வகையில் போட்டி போட்டதில் நாம் நியமித்த வேட்பாளர் ஏதோவொரு வகையில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

ஆகவே ,து எந்தவிதமான சதியும் அல்ல. 4த்தும் அல்ல. இதற்கு மேலதிகமாக சதியைப்பற்றி பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவிதமான யோக்கியமும் கிடையாது.

அவர் பாராளுமன்றுக்கு போனதில் இருந்து பல்வெறுபட்ட பிரதேசசபைகளை உருவாக்குவதில் பெரும் சதிகளை அவர் நடத்தியிருக்கின்றார்.

இங்கே சாவகச்சேரி மற்றும் பருத்தித்து நகர சபை உட்பட பல சபைகளில் பெரும்பான்மை இல்லாத போதும் கூட ஏனையோரின் ஆதரவைப் பெற்று அங்கே ஆட்சியமைத்திருக்கின்றார்.

ஆகவே அவ்வாறான சூழ் நிலையில் சதியைச் செய்பவரே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவது எந்தவிதமான அர்த்தமும் இல்லாத விடயம்.

அது மாத்திரமல்லாமல் எல்லா இடங்களிலும் தாங்கள் ஆட்சியமைக்க விரும்புவதும் அவ்வாறு தாங்கள் ஆட்சியமைக்கா விட்டால் அது சதி என்று முத்திரை குத்தவதும் அது சதி செய்பவர்களின் இயல்பாக இருக்கலாமே தவிர இதில் வேறு எந்தவிதமான விடயமும் அல்ல.

ஆகவே வவுனியா நகர சபை என்பது தமிழ் மக்களின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காக நாங்கள் மிக சிறுபான்மையாக இருந்த போதிலும் வேறு வழியில்லலாமல் நாங்கள் அதில் போட்டியிட்டு ஆண்டவன் சித்தமாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம்.

நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் எதிர்பார்க்கவில்லை.

இருந்து வெற்றி பெற்றிருப்பதால் வவுனியா நகர தமிழ் மக்களுக்கு இயன்றவரை நல்லதொரு ஆட்சியைக் கொடுக்க முடியுமென்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.