யாழ் வேம்படி மாணவி தமிழ் மொழியில் முதலாம் இடத்தினை கிடைத்த கௌரவம்!

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர்கல்லூரி மாணவியினை தனது அலுவலகத்திற்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே பாராட்டியுள்ளார்.
பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர் சகிதம் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்திற்கு நேற்று (03) மாலை 4 மணியளவில் வருகை தந்த மாணவி மிருதி சுரேஸ்குமாருக்கு பசில்பொதியினை வழங்கி ஆளுநர் கௌரவித்தார்.
யாழ்ப்பாணம் குடாநாட்டு மாணவர்கள் அண்மைக்காலமாக கல்வியில் முன்னேற்றம் கண்டுவருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த ஆளுநர். மிருதி சுரேஸ்குமார் மேலும் கல்வியில் முன்னேற்றம் கண்டு இந்த நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
Powered by Blogger.