ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்டார் கட்சியின் செயலாளர்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சியின்  பொதுச் செயலாளரும்  அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இன்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று  மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதனையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள ஜோசப் மைக்கல் பெரேரா தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களின் விருப்பத்தின் படியே கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.