கிரிக்கெட் நிறுவன தேர்தலை ஜூன் 14 ஆம் திகதி வரை நடத்தாதிருக்க தடை!

இன்று  (31) நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலை ஜூன் 14 ஆம் திகதி வரை நடத்தாதிருக்க தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே 19 ஆம் திகதி நடைபெறவிருந்த போதும் அது பிற்போடப்பட்டது. 

பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவை தொடர்ந்து இலங்கையின் விளையாட்டு சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விளையாட்டு துறை அமைச்சர் விடுத்த உத்தரவை ஏற்று, மே மாதம் 31 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தது. 

இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.