இன்று மஹிந்த 16 பேரையும் சந்திக்க மாட்டார்!

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.

 குறித்த கலந்துரையாடலை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், உறுப்பினர்கள் சிலர் அத்தியாவசிய பணிகளின் காரணமாக கொழும்பிற்கு வெளியே உள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், குறித்த சந்திப்பை எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன  தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.