சுமார் 200திரைகளில் ரிலீசாகும் அல்லு அர்ஜுன் படம்!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவரது நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அல்லு அர்ஜுன் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள தெலுங்குப் படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’. இதில் அல்லு அர்ஜுன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சரத்குமார், அர்ஜுன், நதியா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஷால் – சேகர் இசையமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ராணுவ வீரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். என் பேரு சூர்யா என் வீடு இந்தியா என்ற தலைப்பில் தமிழில் வெளியாகும் இந்த படம் நாளை ரிலீசாக இருக்கிறது. இதுவரை 207 காட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன் கூறியுள்ளார். 
Powered by Blogger.