2018 ஆம் ஆண்டில் எச்ஐவியினால் 91 பேர் பாதிப்பு!

இந்த வருடம் முதல் மூன்று காலப்பகுதியில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட 91 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் திட்டம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் 31 பேர் ஆண்கள். இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்று இதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் திலானி ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமது நடவடிக்கை குறித்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் காரணமாக தாயின் மூலமான குழந்தைக்கு எச்ஐவியின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனால் தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு தவிர்க்கப்பட்ட நாடாக உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடத்தின் இந்தக் காலப்பகுதியில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட 75 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
Powered by Blogger.