தப்போவ நீர்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் தப்போவ நீர்தேக்கத்தின் இருபது வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தப்போவ நீர்தேக்கத்தை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நேற்று (24) தப்போவ நீர்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.