கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளால் 300 இலட்சம் வருமானம்!

கொழும்பு உட்பட ஏனைய நகரங்களில் கிடைத்த குப்பைகளின் மூலம் 300 இலட்சம் வருமானம் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 6 மாதங்களில் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 கட்டுபெத்தேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

 கொம்பொஸ்ட் உரம் மற்றும் மீள் சுழற்சி பொருட்கள் மூலம் இந்த வருமானத்தை பெற்றதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் காலங்களில் கொழும்பு நகரில் சேரும் குப்பைகளின் மூலம் கிடைக்கும் நிதியை, துறைமுக நகரத்தில் உருவாகும் பூங்காவை கட்டியெழுப்ப பயன்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.