சாவகச்சேரியில் வழமையான அனுமதியினை மீறி 31 மாடுகள் இறைச்சிக்காக வெட்டு!

சாவகச்சேரி கொள்கலத்தில் 31 மாடுகள் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்த தவிசாளர்  வசமாக மாட்டியும் இதுவரை நடவடிக்கை  எடுக்கவில்லை


இன்றையநாள் 16.05.2018 புதன்கிழமை சாவகச்சேரி நகரபைக்கு சொந்தமான மாட்டிறைச்சி கடையிலிருந்து சுமார் 25 மாடுகள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொழும்பிற்கு அனுப்பவிருந்த சமயம் ஏனைய கட்சி உறுப்பினர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அதோடு இறைச்சியை தாம் தவிசாளரின அனுமதியுடன்தான் வெட்டியதாகவும், தமக்கு அனுமதி இருப்பதாகவும் தாங்கள் மஸ்தானிற்கே அனுப்ப வெட்டியதாகவும் கூறுகின்றனர்.

ஏற்கனவே இது தொடர்பாக அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் சட்டவிரோதமாக இயங்கிய கொள்கலனுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினத்தில் தவிசாளரின் செயற்பாடு குற்றத்திற்குரியதாக அமைந்துள்ளதுடன் பிரதேச வர்த்தகர்களும், மக்களும் மனகிலேசம் அடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல தேசியதிற்கு முன்னுரிமை வழங்குகிறோம் என்று பேச்சளவில் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.