தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேருக்கு பிணை!!

தமிழகத்தில் அகதிகளாக இருந்து படகு மூலம் தாயகம் திரும்பிய 4 பேர் மாதகல் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

இதன்போது, தாயகம் திரும்பிய 4 பேருக்கும் பிணை அனுமதி வழங்கிய நீதிமன்றம், அவர்களைப் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு அழைந்து வந்த படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது.
Powered by Blogger.