முப்படை அதிகாரிகள் 50 பேருக்கு "விஷிஷ்ட சேவா விபுஷண" பதக்கம்!

தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்கடை ஆகிய முப்படைகளையும் சேர்ந்த 50 அதிகாரிகள் "விஷிஷ்ட சேவா விபுஷண" பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

முப்படைளையும் சேர்ந்த தற்போது சேவையில் இருக்கின்ற மற்றும் ஓய்வுபெற்ற 52 பேருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 

முதலில் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கு இந்தப் பதக்கம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது
Powered by Blogger.