61 ஆடுகளுடன் திருடன் சிக்கினார்!

கிளிநொச்சிப்பகுதியிலிருந்து ஆவணங்கள் அற்ற முறையில் ஆடுகளை கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து இன்று அதிகாலை 61 ஆடுகளுடன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து எவ்வித ஆவணங்களும் அற்ற நிலையில் அளவிற்கு அதிகமாக 61 ஆடுகளை மீன்கள் எடுத்துச் செல்லப்படும் கூலர் ரக வாகனத்தில் கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஆடுகளுடன் குறித்த வாகனச்சாரதியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆடுகளுடுன் தன்னையும் விடுதலைசெய்யுமாறு குறித்த சாரதி தமக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Powered by Blogger.