7 அடி மாலைப்பாம்பு இறந்த நிலையில் மீட்பு!

ரயில் சில்லில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பொன்று மீட்கப்பட்டுள்ளது.  
ஹட்டன் புகையிரத நிலையத்திற்கும் ரொசல்ல புகையிரத நிலையத்திற்கும் இடையில்  இன்று காலை இறந்த நிலையில் மூன்று துண்டுகளாக இறந்து கிடந்த மலைப்பாம்பின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் ரயில் நிலையத்தில்  இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரயிலின் சில்லில் ரயில் கடவையை ஊடறுத்து கடந்து சென்ற மலைப்பாம்பே ரொசல்லை 106 ஆம்  கட்டை பகுதியில்  இவ்வாறு சிக்குண்டு  பலியானதாக ஹட்டன் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்மானது உணவு தேடி உலாவியபோதே ரயில் சிக்குண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர் 

No comments

Powered by Blogger.