தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேசு மாமா9ஆம் ஆண்டு நினைவு நாள்!
சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைவாணர் கணேசு மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். போராட்டத்துக்காக ‘கலை’ வடிவில் போராடிய உண்மை கலைஞன்….எத்தனை படங்கள், குறும்படங்கள்…வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராட்டத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர். 09.05.2009 அன்று 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்.


.jpeg
)





கருத்துகள் இல்லை