கவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு!

தேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு
இன்று மதியம் முல்லை. முத்தையன்கட்டிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.
இதில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரும் கலந்துகொண்டனர்.
பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மிகவும் உணர்வெழுச்சியுடன் இறுதி வணக்கக் கூட்டத்தையும் இறுதிப் பவனியையும் நடத்தியிருந்தனர்.

No comments

Powered by Blogger.