பெண்களின் அரசியல் விழிப்புணர்வு!

அரசியலில் பெண்களின் நிலை தற்போது குறைவாகவுள்ளதனால்,
அவர்களிற்கான சாதகமான அரசியல் தளத்தினை அமைக்கவேண்டிய தேவையும் அவர்களது தற்துணிவை ஊக்கிவிக்கவேண்டிய தேவையும் சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு.
அந்தவகையில், ஜசாக் (JSAC) நிறுவனம் USAID/SDGAP இன் நிதியனுசரணையில் கிராமமட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் கடந்தவாரம், ஆனைக்கோட்டை, உரும்பிராய் மற்றும் இளவாலை பிரதேசங்களில் இடம்பெற்ற 120 க்கு அதிகமான மக்களுடன் தாம் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக ஜசாக் (JSAC)நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பெண்களுக்கான அரசியல் விழிப்புணர்வுச் சந்திப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.