பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம்!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண
உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

நிதியினை கருத்திற் கொள்ளாது அரசினால் மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் ஆய்வு செய்து அவற்றினை உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்ததன் பின்னரே ஜனாதிபதி இந்த பணிப்புரை வழங்கியுள்ளார்.
Powered by Blogger.