குழந்தையின்மையைக் காரணம் காட்டி வாழ்வாதாரத் திட்டங்கள் புறக்கணிப்பு!

குழந்தைகள் இல்லாத காரணத்தால் அரசினால் வழங்கப்பட்டு வரும் வாழ்வாதார உதவித்திட்டங்களில் இருந்து தான் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு மிருசுவிலில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மனித நேய வேலைத்திட்டங்களின் கீழ் அவருக்கு ஒரு வீட்டைக்கட்டித் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 எனது குடும்பம் நானும், எனது கணவருமாக இரு அங்கத்தவர்களைக் கொண்டது. தற்போது சிறிய கொட்டிலொன்றில் வசித்து வருகின்றோம். எனக்கு வயது 38. கணவருக்கு வயது 39. ஏழை விவசாயிகள். ஆனால், குழந்தைகள் எமக்கில்லாத காரணத்தால், கடந்த 13 வருடங்களாக அரசின் எந்த உதவிகளும் எமக்குக் கிடைப்பதேயில்லை.

 உங்களால் வழங்கப்படுகின்ற உதவித்திட்டத்தில் எம்மையும் பயனாளியாக இணைத்து, எமது காணியில் வீடொன்றைக்கட்டித்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Powered by Blogger.