யாழில் இலக்கியவாதியுமான பண்டிதர் விபத்தொன்றில் படுகாயம்!

இலக்கியவாதியும் வெண்கரம் படிப்பக ஆலோசகர்களில் ஒருவருமான பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் அவர்கள் விபத்தொன்றில் சிக்கி காலில் படுகாயமடைந்துள்ளார். கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் கல்லுண்டாய் வீதியில் உள்ள திருத்தப்படாத மதகு ஒன்றின் சல்லிக் கற்கள் சறுக்கியதில் அவர் வீதியில் வீழ்ந்து காயமடைந்தார்.
வீதியால் சென்றவர்கள் அவரை மீட்டு வட்டு. கோட்டைக்காடு பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, மேற்படி மதகு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சேதடைந்த போதிலும் அதைத் திருத்தியமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், போக்குவரத்துச் செய்யும் மக்கள், குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அவ்வப்போது இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.