யாழ் முதல்வர் தொடர்பில் ஆட்சேபமின்றி முன்னணி மௌனம் சாதித்தது ஏன்??

யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல் சபையின் முன் அனுமதி பெற்றிருக்காது தன்னிச்சையாக நடந்துகொள்வதாகக் கூறி அதற்கு எதிராக வடக்கு மாகாண முதலமைச்சர் வரை சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றை (08) யாழ் மாநகசபையின் அமர்வுகளின்போது குறித்த விடயங்கள் தொடர்பில் மௌனம் சாதித்துள்ளனர்.
இன்றைய அமர்வில் முன்னணியினரால் குற்றஞ்சாட்டப்பட்ட நிதிக்குழு உள்ளிட்ட நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டன. குறித்த குழுக்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் பலர் உள்ளாவாங்கப்பட்டனர். இவற்றின்போதும் ஆட்சேபம் எதுவுமின்றி முன்னணி மௌனம் சாதித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Powered by Blogger.