அதிக விலையில் உர மூடைகளை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கை !

உர மூடை ஒன்றிற்கு 1500 ரூபாவிற்கும் அதிமான விலையில் விற்பனை செய்யப்படுமாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

 விவசாய அமைச்சரின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது . விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் முறையாக வழங்கப்படும் என்றும், கமநல சேவை அலுவலகங்களின் ஊடாக 500 ரூபாவிற்கும் சந்தையில் 1500 ரூபாவிற்கும் உரம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன், எதிர்காலத்தில் விவசாய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைத்து விவசாய நிறுவனங்களையும் இணைத்த வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.