கரவெட்டி கலாசார மத்திய நிலையம் விருந்தினர்களால் திறந்து வைப்பு!

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரகாரம், உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கரவெட்டி கலாசார மத்திய நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

 நிகழ்வில் உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, சிறுவர் இரைாஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,நாடபாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட விருந்தினர்களால் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

 அதேவேளை நிகழ்வுக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
Powered by Blogger.