சிறுவர் சேமிப்பு கணக்குகளுக்கும் வரி!

சிறுவர் சேமிப்புக் கணக்குகளில் இருந்து 5 வீத வரியை அறவிடுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அரசாங்கம் இந்த வரி அறவீட்டை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைய சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து 5 வீதத்தை வரிப் பணத்தை, அரசாங்கம் வருமானமாக பெற்றுக்கொள்வதாகவும் அந்த இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

வரலாற்றில், சிறுவர் சேமிப்புக் கணக்கிலிருந்து வட்டி அறிவிடும் முதலாவது அரசாங்கம் இதுவே எனத் தெரிவிக்கும் அந்த இயக்கம், இந்த விடயத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

"சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் 18 வயது வரை பணத்தை மீளப்பெற முடியாத நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் சிறுவர் சேமிப்புக் கணக்கில் வரி அறவீட்டை மேற்கொள்வதால் மக்களின் சேமிப்பு குறைவடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது" என அந்த இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.