சூப்பர் சிங்கர் மேடையில் அழுத ராஜலட்சுமி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், கிராமிய மனம் வீசும் பாடல்களை பாடி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதையும் கொள்ளைக்கொண்ட தம்பதிகள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ்.
ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களை மட்டும் இன்றி பிரபலங்களையும் கவர்ந்து. அவர்களுடைய பாராட்டுக்களை பெற்று வருகின்றனர்.
மேலும் செந்தில் கணேஷை விட, ராஜலட்சுமிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றும் கூறலாம்.
இந்நிலையில், அண்மையில் ராஜலட்சுமி அபர்ணாவுக்கே ஓட்டு போடுங்கள். இனி என்னால் கலந்துகொள்ள முடியாது. என்னால் முடிந்தளவு பாடிவிட்டேன். அவர் தான் பொறுத்தமானவர் என அழுதுகொண்டே சூப்பர் சிங்கர் மேடையில் கூறினார்.
இது ரசிகர்களுக்கு சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது கணவர் செந்தில் செக்கச் சிவந்தவளே கண்ணமா என துள்ளலான பாடலை பாடி ராஜலட்சுமியையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியாக்கிவிட்டார்.
மேலும், இந்த பாடலை தன்னுடைய கணவர் வாயால் கேட்ட பிறகு , ராஜலட்சுமிக்கு சொல்லவா வேண்டும். தன்னையும் மறந்து  செம்ம சந்தோஷமாக மாறிவிட்டார்.  
Powered by Blogger.