ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் பதவி கோரல்!

அமைச்சர் சாகல ரத்நாயக்க தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியொன்று வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கமான சகாக்களில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் முக்கியமானவர்கள்.,

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட கட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு அமைச்சர் சாகல நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன

எனினும் குறித்த பதவி பொதுச் செயலாளர் பதவியை விட அதிகாரம் குறைந்தது என்பதன் காரணமாக தனக்கு உபதலைவர் பதிவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Powered by Blogger.