எதிர்கட்சி தரப்பில் அமர்ந்தமையானது உரிய முறைப்படியே!

அரசாங்க தரப்பில் இருந்து விலகிய தாம் உள்ளிட்ட, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர், நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் எதிர்கட்சி தரப்பில் அமர்ந்தமையானது உரிய முறைப்படியே என நாடாளுமன்ற உறுப்பினர் ஷந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற சம்பிரதாயப்படி செங்கோல் வைப்பதற்கு முன்னரே குறித்த 16 பேரும் எதிர்தரப்பில் அமர்ந்துக்கொண்டதாக, அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

 எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்த சந்திம வீரக்கொடி, செங்கோல் வைக்கப்பட்டதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை . ஆனால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே தாங்கள் அமர்ந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

Powered by Blogger.