தூக்கில் போட சொல்லும் நடிகை சமந்தா!

சமீப காலமாக நடிகைகள், பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்வது குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முதல் முறையால தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் கலக்கிக் கொண்டிருக்கும் சமந்தா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்... "திரையுலகில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஒரு சில சம்பவங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. 
நான் சினிமா துறையில், எட்டு வருடங்களாக இருக்கிறேன், நானும் சில கருப்பு ஆடுகளால், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கேள்வி பட்டுளேன். இப்படி பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்ளும் சிலரை இனம்கண்டு ஒதுக்கி விட்டால் சினிமா துறையை விட நல்ல துறை இருக்க முடியாது. அதே போல் சினிமாவில் பல நல்ல உள்ளங்களை தான் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து கருத்து கூறியுள்ள சமந்தா, ' பாலியல் குற்றவாளிகளை, குறிப்பாக குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளை அரசு தூக்கிலிட வேண்டும் என்றும், பல நாடுகளில் கற்பழிப்புக்கு கடுமையான தண்டனை வழங்கி வருகின்றனர்... அது போல் நம் நாட்டிலும் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று சமந்தா கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.