பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா ? இல்லையா ?

அதிகாரிகள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் நடத்தை காரணமாக இன்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவுறுத்த திட்டமிட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளதாக தொடருந்து தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இது தொடர்பில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ள தொழிற்சங்க கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நேற்றைய தினமும் பல தொடருந்து சேவைகள் தாமதமாகவே இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக தொடருந்து பயணிகள் இன்னல்களுக்கு முகங்கொடுத்ததாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 12.1% வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணி முதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடருந்து தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது.


Powered by Blogger.