நெடுந்­தீவு கட­லில் மீன்­பி­டிக்­கச் சென்ற மூன்று மீன­வர்­க­ளைக் காண­வில்லை!

 நாவாந்­து­றைப் பகு­தி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் இரவு ஒரு பட­கில் மீன்­பி­டிக்­கப் புறப்­பட்­டுச் சென்ற மூன்று மீன­வர்­க­ளைக் காண­வில்லை என்று யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

 நாவந்­துறை வடக்­கைச் சேர்ந்த ஜோன் மல்­கன் விமல் (வயது  ;–44), செப­மாலை அலெக்ஸ் (வயது-–35), மகேந்­தி­ரன் ரூபன் (வயது-30) ஆகி­யோரே காணா­மல் போயுள்­ள­னர்.

 நேற்று முன்­தி­னம் மாலை நாவந்­துறை கட­லி­ருந்து பட­கில் மூவ­ரும் புறப்­பட்­டுள்­ள­னர். நெடுந்­தீ­வுப் பகு­தி­யில் மீன்­பிடி நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில் நேற்­றுக் காலை 8 மணிக்கு ஜோன், தனது மனை­விக்கு அலை­பேசி அழைப்பு எடுத்­துள்­ளார். படகு இயந்­தி­ரம் பழு­த­டைந்­துள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார். இதன் பின்­னர், அவ­ரது அலை­பேசி இயங்­க­வில்லை.

இந்த நிலை­யில் நேற்­றைய தினம் அவர்­க­ளு­டன் மீண்­டும் தொடர்பு கிடைக்­காத நிலை­யில், உற­வி­னர்­க­ளால் கடற்­தொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளம் மற்­றும் யாழ்ப்­பா­ணம் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டது.

கடற்­ப­டை­யி­ன­ருக்கு தக­வல் வழங்­கப்­பட்டு கடற்­ப­டை­யி­னர் தேடு­தல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது

Powered by Blogger.