இன்று முழுமையான மாற்றம் நடக்காது!


சிறிலங்காவில் ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம், முழுமையான அமைச்சரவை மாற்றமாக இருக்காது என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

 சிறிலங்கா அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ,  இன்று காலை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றம், முழுமையான மாற்றமாக இருக்காது. பகுதியளவிலான அமைச்சரவை மாற்றம் தான் இது.

 சில அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சர் பதவிகளையே வகிப்பர். சிலருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.