யாழ்.மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு ஒரு நாள் கருத்தமர்வு !

யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் புதிதாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தமர்வு யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தமர்வை ஆரம்பித்து வைத்தார். வட மாகாண முதலமைச்சரின் அமைச்சுச் செயலாளர் தொடக்க கருத்துரையை நிகழ்த்தினார்.
கருத்தமர்வில் யாழ். மாநகர சபை, நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Powered by Blogger.