திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க மற்றும் நாம் தமிழர்
கட்சியின் தொண்டர்களுக்கிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்த சீமானை வரவேற்கத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கார் வந்து நிறுத்தப்பட்டது. சீமான் செல்லும் காருக்கு வழி குறைவாக இருந்ததால் அங்கிருந்த ம.தி.மு.க தொண்டர்களை சற்று விலகுமாறு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால் இரு கட்சித் தொண்டர்களுக்கும் வாக்குவாதத்தில் ஆரம்பித்து இறுதியில் மோதலில் முடிந்தது. இரு கட்சியினரும் தங்கள் கைகளில் வைத்திருந்த கொடிக் கம்புகளை வைத்துத் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலின் நடுவில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது. பிறகு மோதலில் ஈடுபட்டவர்களுக்கு மத்தியில் நுழைந்த போலீஸார் இரு கட்சியினருக்கும் சமாதானம் செய்து வைத்து கூட்டத்தை கலைத்தனர்.
Powered by Blogger.