முள்ளிவாய்கால் பிணங்களுக்கு நடுவில் கடந்து வந்தோம்!

பிணங்களுக்கு நடுவினில்
நடைப்பிணமாக நாமும்
செல்மழை பொழிகையில்
கண்ணீர் மழையில் நாமும்
மரண ஓலத்தின் மத்தியில்
மந்தைக்கூட்டமாக நாமும்
யார் விழுகிறார் யார் ஓடுகிறார்
என்று அறியாமல் நாமும்
எங்கிருந்து குண்டு வருகிறது
என தெரியாமல் நாமும்
கண்முன்னே உறவுகள் சுருண்டு விழ
அச்சத்திலேயே செத்தோம் நாமும்
வாய்க்கரிசி போடவே அரிசியில்லை
வயிற்று பசியுடன் நாமும்
வாழ்வா சாவா என்பது தெரியாமல்
குழப்பத்திலே நாமும்
இனி இருந்தென்ன செத்தாலென்ன
என்ற விரக்தியில் நாமும்
வீரத்தால் வீழ்த்திடாத விடுதலை வேட்கையை
வஞ்சகதனத்தால் வீழ்த்திய போது நாமும்
முள்ளிவாய்கால் கடந்து வந்தோம்
பிணங்களுக்கு நடுவில்
Powered by Blogger.