நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் நினைவேந்தல்!

யாழ்.நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் நெடுந்தீவில் உள்ள குமுதினி படுகொலை நினைவுதூபியில் நடைபெற்றது.

1985ம் ஆண்டு குமுதினி படகில் பயணித்த பசிச்சிளம் குழந்தை தொடக்கம் பெரியவர்கள் வரை வெட்டி படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள் கடந்துள்ளது.

அந்த படுகொலையில் உயிர்நீத்தவர்களின் நினைவேந்தல் இன்று காலை நெடுந்தீவில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்நினைவேந்தலில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் குமுதினி படுகொலையில் உயிரிழந்தவர்களின் உற வினர்கள் என பெருமளவானர்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தினர். 
Powered by Blogger.