மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் தொடர்பில் ஆராய்வு!

பதுளை – இரத்தினபுரி வீதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக மண்சரிவு ஆய்வு தொடர்பிலான விசேட அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மண்சரிவு ஆய்வு மற்றும் அபாய வலய முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட புவியியலாளரான காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை கினிகத்தனை வீதி நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹல்துமுல்லை வல்ஹபுதன்ன பிரதேசத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ பிரிவின் அதிகாரி ஈ .எல்.எம்.உதய குமார தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.