யாழ் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப்பரீட்சை விபரங்கள்..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் நடாத்தும் வெளிவாரிப்பரீட்சை 2016, வியாபார முகாமைத்துவ மாணிக் கற்கை நெறி(வெளிவாரி) முதலாம் வருட 2 ஆம் அரையாண்டு  பரீட்சை 2016, இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை 2016, மூன்றாம் வருட 2 ஆம் அரையாண்டுப் பரீட்சை 2016 ஆகிய மேற்படி பரீட்சைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மே மாத இறுதியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தகுதியான பரீட்சார்திகள் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் விண்ணப்பபடிவத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
 மேற்படி பரீட்சைகளுக்கான பூர்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி 18.05.2018 வெள்ளிக்கிழமை ஆகும்.
மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் 0212223612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளமுடியும். என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.