மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்..!

வடமராட்சி கிழக்கு தாளையடி,மருதங்கேணி மற்று ம்
செம்பியன்பற்று பகுதிகளில் வெளிமாவட்டங்க ளை சேர்ந்த அட்டை பிடிக்கும் மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து மேற்படி பிரதேசங்களை சே ர்ந்த மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கின் கரையோரங்களை அட்டை பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்து மீறல் மற்றும் 100 கணக்கான வாடிகள் அமைத்து தங்கு தொழிலை மேற்க் கொள்வதை எதிர்த்து இவ் கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்தில் குறித்த வாடிகளை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள் உங்கள் கடல்ப்பரப்பில் எங்களை மீன்பிடிக்க அனுமதிப்பீர்களா?

நீங்கள் புத்தளத்தில் இருந்து இங்கு வந்து அட்டைத் தொழிலை மேற்கொள்வதால் எமது வாழ்வாதாரம். முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சிறு தொழில் முதல் கரைவலைத் தொழில்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என முழு வாடிகளுக்கும் சென்று தமது நிலைப்பாட்டினை விளக்கியதுடன் காலக்கெடுவொண்றையும் விதித்துள்ளனர்.

நாளை காலை 10 மணிக்கு முன்பதாக குறித்த வாடிகள் அகற்றப்பட வேண்டும் தவறினால் நாளை வடமராட்சி கிழக்கு 24 மீனவ சங்கங்களும் இணைந்து வாடிகளை அகற்றுவோம் என இவ் முற்றுகையின் போது விதித்துள்ளனர். 
Powered by Blogger.