இந்திய அணி அறிவிப்பில் புதுக்குழப்பம்..?

இந்திய அணி அறிவிப்பில் புதுக்குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் பிசியாக இருக்கும்ம் பல்வேறு அணிகள்,ஐபி எல் முடிந்த பின்னர், அடுத்த போட்டிக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்காக "அவர்' தயாரித்துக் கொள்ள சர்ரே கவுண்டி அணிக்கு ஆட அனுமதி வழங்கப்பட்டது, அந்த அணியும் ஜூன் மாதம் முழுதும் விராட் கோலி சர்ரே அணிக்கு ஆடுவார் என்று தன் இணையதளத்திலும் அறிவித்து விட்டது

ஜூன் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியா ஆடுகிறது

இந்நிலையில் சர்ரே அணி ஜூன் 25-28-ல் யார்க் ஷயருடன் மோதுகிறது. இதில் கோலி ஆடியாக வேண்டும், அவர் ஒப்பந்தங்களின் படி ஜூன் மாதம் முழுதும் சர்ரே அணிக்கு அவர் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இப்போது ஜூன் 27-ல் கோலி எப்படி இந்திய அணியின் கேப்டனாக டி20யில் களமிறங்க முடியும் என்பதே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
Powered by Blogger.