வவுனியாவில் மாணவர்கள் அடவாடித்தனம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு
மைதானத்திற்கு அருகே தினசரி மாலை வேளைகளில் வீதியோரங்களில் பாடசாலை மாணவர்கள் நின்று வீதியில் செல்லும் பெண்களை பகிடி செய்வதுடன் வீதியில் புகைப்பிடிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக பல தடவை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் தெரியப்படுத்தி வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே பொலிஸ் காவல் அரணை அமைக்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் சிறிலங்கா காவல்துறையினர் அசமந்தபோக்காக செயற்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீதியோரத்தில் பாடசாலை மாணவர்கள் சண்டையிடும் காட்சி எமது கமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் சண்டையிட்ட சமயத்தில் குருமன்காட்டில் நின்ற சிறிலங்கா காவல்துறைனரிடம் மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை தெரிவித்த போதிலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

வைரவப்புளியங்குளத்தில் மாலை வேலையில் இளைஞர்கள் வீதியோரங்களில் நின்று சண்டை பிடிப்பது. தலைக்கவசமின்றி வேகமாக மோட்டார் சைக்கிலில் செல்வது என பல்வேறு விதமான செயல்களின் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளிவந்தால் அடுத்த நாள் பொலிஸார் காவலில் நிற்பார்கள் .பின்னர் நிற்கமாட்டார்கள். சிறிலங்கா காவல்துறையினர் இளைஞர்களின் செயற்பாட்டிற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா ? என சந்தேகம் எழுந்துள்ளது.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் மீது சற்று அக்கறை செலுத்துங்கள் என தெரிவித்தனர். 
Powered by Blogger.