இரணைதீவில் மக்களுடன்"தூயநகரம் தூய கரங்கள்"கொள்கையில் முன்னணியின் சிரமதான பணி!

இரணைதீவில் கடற்படையின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிலமீட்பு போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திந்தார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்

இன்று புதன்கிழமை இரணைதீவுக்குச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனையவர்களும் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நிலங்களில் புல்லு வெட்டும் கருவி ஊடாக புல்லுகள் மற்றும் பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்து கொடுத்துள்ளார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் புல்லுவெட்டும் கருவியை பாவித்து புல்லுவெட்டினார்கள்." தூயநகரம் தூய கரங்கள் "கொள்கைக்கு அமைவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேலை திட்டம் மேற்கொண்டனர்.

Powered by Blogger.