எழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் கலந்து கொண்டு மேதினப் பேரணியைக் கொடியசைத்துச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த பேரணியானது கே. கே.எஸ் வீதியூடாக வேறு பல ஊர்திப் பவனிகளையும் இணைத்துக் கொண்டு நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்தை சென்றடைந்தது.ஆலய முன்றலில் ஒருங்கிணைக்கப்பட்ட மேதின ஊர்திகள் அங்கிருந்து நல்லூர் கிட்டுப் பூங்காவைச் சென்றடைந்தது.அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டமும் இடம்பெறம் பெற்றதாக ஏற்பாடதாக ஏற்ப்பாட்டாளர்கள் இங்கு குறிப்பிடுள்ளனர்.
Powered by Blogger.