சீனத் தூதுவர் இலங்கை இராணுவத் தளபதியுடன் சந்திப்பு!

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் தொடரும் என்றும், இன்னும் கூடுதலான பயிற்சி வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், ஒரு பாதை ஒரு அணை திட்டத்தின் முக்கியத்துவம், அதனால் சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியில் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்தும் சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு, சீனத் தூதுவர் விளக்கமளித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.