லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போயிருந்த பதக்கம் கண்டெடுக்கப்பட்டது!

காணாமல் போயிருந்த மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கொள்ளுப்பிட்டி - கடுவலை மார்க்கத்திலான 177ம் இலக்க தனியார் பஸ் ஒன்றில் இருந்து இந்தப் பதக்கம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். 

மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டில் இருந்த கோல்டன் பீகொக் (Golden Peacock) விருது கடந்த 02ம் திகதி அவருடைய இறுதிக்கிரியையின் போது காணாமல் போயிருந்தது. 

1965ம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு இந்த விருது மற்றம் பதக்கம் கிடைத்திருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.