நாடு தழுவிய ரீதியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் பேரூந்து சாரதிகள்!

பேரூந்து கட்டணத்தை 12.5 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனரின் வேதனமும் 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இலங்கை தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.  குளியாப்பிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பிரதான செயலாளர் சுமித்ர குமாரதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்படாத விடத்து, நாடு தழுவிய ரீதியான தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Powered by Blogger.