மட்டக்குளியில் விசேட சுற்றிவளைப்பு!

மட்டக்குளி  காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு பேர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காவல்துறை அதிரடிப் படையினரின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்குளி காவல்துறை தெரிவித்துள்ளது.

 இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவருடன், கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இதனுடன் சுற்றிவளைப்பின் போது இராணுவ சீருடையும் மீட்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.