ஈழ அகதிகள் காங்கேசன்துறையில் கைது!

தமிழக ஈழ அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.
இன்று அதிகாலை 2.00 மணியளவிலேயே கைது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலை படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.