கண்டி தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கண்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பூஜாபிட்டிய, அம்பதென்ன பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 07ம் திகதி பூஜாபிட்டிய, அம்பதென்ன, வெலேகடே பிரதேசத்தில் உள்ள வணக்கஸ்தலம் மீது தாக்குதல் நடத்தி குழப்பத்தை தோற்றுவித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 22 மற்றும் 55 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.