தொகுப்பாளினி அஞ்சனாவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...!

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்புகள் வந்தும் அதனை மறுத்து விட்டு, திருமணம் வரை தொகுப்பாளராகவே இருந்தார்.
'கயல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சந்திரனை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்தும் பல சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், கடந்த சில மாதத்திற்கு முன்பு, திடீர் என தனக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதாகவும். இதனால் தொகுப்பாளர் வேலைக்கு இடைவெளி விட உள்ளதாக அறிவித்தார்.
இவர் இப்படி அறிவித்தது, பல ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தாலும்... உங்களுடைய விருப்பம் என்று கூறி சந்தோஷமாக இருங்கள் என வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர் ரசிகர்கள்.
இதை தொடர்ந்து இவரை எந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க கூட முடியவில்லை. தற்போது இவர் ஏன் தொகுப்பாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்கிற தகவல் புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது.
அஞ்சனா தற்போது கர்பமாக உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆனாலும் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Powered by Blogger.